ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விவசாய சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.. மேல்முறையீடு செய்யலாம் என அறிவிப்பு..

Default Image
  • அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி குரித்த வழக்கு.
  • நீதிபதி கண்காணிப்பில்  நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது.இந்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

Image result for supreme court

அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் தான் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.எனவே இந்த மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மணுவில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், உத்தநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தற்போது உள்ள  நிலையில் ஜல்லிக்கட்டை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் என அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்