ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல – கமலஹாசன்
எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என கமலஹாசன் ட்வீட்.
வரும் 2023இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜல்லிக்கட்டு குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து மநீம கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.
ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 13, 2022