jallikattu [File Image]
பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமானது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி அந்த போட்டி தான்.
அதனை தொடர்ந்து அடுத்ததாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. அதைப்போல, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்றால் போட்டி நடைபெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்துக்கு இதுதான் பெயர்!
இதனையடுத்து, திருச்சியில் எந்தெந்த இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்பதற்கான விவரமும் அதற்கான தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 16-ல் சூரியூரிலும், ஜனவரி- 19 ஆம் தேதி நவலூர் குட்டப்பட்டு மற்றும் மணப்பாறையிலும் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். மேலும், 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்த நிலையில் 3 இடங்களில் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…