3வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு.!
- கோவையில் தொடர்ந்து 3வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவையில் செட்டிப்பாளையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வருடம் 3வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும் காளையர்களுக்கும் இடையேயான மல்லுக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் முதல் காளையாக கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் காளை வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டது.
மேலும் அதைத்தொடர்ந்து பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காளைகள், களத்தில் சீறி பாய்ந்தன. இதில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், பீரோ உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகிறது. 3வது ஆண்டாக நடைபெறும் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.