கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை முதல் 16ம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை முதல் 16ம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12ஆம் தேதி புதன்கிழமை மதுரை கிழக்கு, மதுரை கீழக்கு வடக்கு. கிழக்கு தெற்கு ஒன்றியங்கள் மற்றும் வண்டியூர் பகுதிகளுக்கான ஜல்லிக்கட்டு விழா என தனித்தனியே நடைபெறுகிறது. மேலும், வருகின்ற 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சோழ வந்தான் தொகுதிக்கு என பிரத்யோகமாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது என மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்காக தொகுதி அளவில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பதிவு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு பணிகளும், சுலையரங்கத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காளைகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கான பாதை மற்றும் பார்வையாளர் மாவட்டத்திற்கு செல்வதற்கு வழிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும், அரங்கில் காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் நிரந்தரமாக மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போல், தற்காலிக குடி நீர் தொட்டிகள், உணவு உள்ளிட்டவைகள் வைப்பதற்கு தேவையான இடவசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பாரம்பரிய வாடி வாசல் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.