அனைத்து தரப்பினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் : ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன்
அனைத்து தரப்பினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என ஜல்லிக்கட்டு குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தெரிவித்துள்ளார்.
அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டியில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கலந்து கொள்வதாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவனை தேர்தெடுத்தார்.
இதனையடுத்து அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து அவனியாபுர ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கூறியுள்ளார்.