ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான வழக்கு, இன்று விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குழு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லூத்ரா, பொங்கல் நடைபெறும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென முறையிட்டிருந்தார். இதேபோல் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுடன் இயற்றப்பட்டதை எடுத்துக்கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, நீதிபதிகள் அமர்வு விசாரணையை, ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள், நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வர இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக இன்று எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்தது. அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…