27 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி.!
தஞ்சை அருகே மானோஜிபட்டியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 800 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்த இந்தப் போட்டியில் காளைகளை அடக்குவதற்காக 357 வீரர்கள் களத்தில் குதித்தனர். காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு குளிர்சாதன பெட்டி, பீரோ, சைக்கிள், தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்.