ஜன.,15 முதல் 31 வரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. அரசாணை வெளியீடு.!

Default Image
  • ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து  தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
  • ஜன.,15 முதல் 31 வரை  என மொத்தம் 16 நாட்கள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக அரசு வெளியீட்டுள்ள அரசாணையில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம்  தேதி என மொத்தம் 16 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீட்டுள்ளது.

தைதிருநாள் என்றாலே பொங்கலும்,கரும்பும்,விவசாயியும்,ஜல்லிக்கட்டும் தான் மிகவும் சிறப்பானது.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சொல்லவே வேண்டாம் தமிழகமே களைக்கட்டும் ஒரு திருவிழா தான் ஜல்லிக்கல்டு.வீர தமிழனின் செல்லவிளையாட்டு என்று சொல்லலாம் தன்னிடம் பாசமுடன் பழகிய காளைகள் சீரிவரும் பொழுது அதனை இளம்காளையர்கள் அடக்கி மகிழுவார்கள் அதிலும் பிடி கொடுக்காமல் சீரும் காளைகலும் உண்டு வெற்றிப்பெற்ற காளை மற்றும் காளையர்களை பாரட்டும் விதமாக சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.நடப்பாண்டிற்கான ஜல்லிகட்டி போட்டி 15 தேதி நடைபெறுகிறது.இதற்கன ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் முடிக்கி விட்ட நிலையில் மற்ற மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.மேலும் மதுரை மாவட்டத்தில் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவச் சோதனைகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்