மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று அதாவது ஜனவரி 15 அவனியாபுரத்தில் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக திருப்பரங்குன்றம் முதல் அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் மேடை வரை இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திரு. மாணிக்கம் அவர்கள் தலைமையிலான குழு, கண்காணித்தனர்.மேலும் இந்த விழாவில், வருவாய்,பேரிடர்,தொழில்நுட்ப துறைகளின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாட்டை பார்வையிட்டனர். இந்த போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தன. 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்னர், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதை தொடர்ந்து போட்டி துவங்கியது.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…