மாடுகளுடன் மல்லுக்கட்ட துவங்கியது மஞ்சுவிரட்டு.. காளைகளும் காளையர்களும் புகுந்து விளையாட தொடங்கினர்.. அவனியாபுரத்தில் அட்டகாசம்…
- இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி முதலாவதாக அவனியாபுரத்தில்.
- தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு வெகு ஆரவாரத்தோடு துவங்கியது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று அதாவது ஜனவரி 15 அவனியாபுரத்தில் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக திருப்பரங்குன்றம் முதல் அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் மேடை வரை இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டை, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திரு. மாணிக்கம் அவர்கள் தலைமையிலான குழு, கண்காணித்தனர்.மேலும் இந்த விழாவில், வருவாய்,பேரிடர்,தொழில்நுட்ப துறைகளின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாட்டை பார்வையிட்டனர். இந்த போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தன. 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்னர், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதை தொடர்ந்து போட்டி துவங்கியது.