ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்க்ளுக்கு ரூ.12 பிரீமியத்தில் 2 லட்சத்திற்கான காப்பீடு திட்டம் கட்டாயம்..!!!ஆட்சியர் அறிவிப்பு..!!
பொங்கல் 15ம் தேதி நடைபெறுகிறது.இதனையொட்டி களைகட்ட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளும்,மாடுபிடி வீரர்களும் தயாரகி உள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியுடைய மாடுபிடிவீரர்கள் தகுதிபெற்றனர்.
இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் காயம் சிலநேரம் மரணம் ஏற்படுவதும் உண்டு இந்நிலையில் மதுரை ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ. 12 பிரீமியத்தில் இரண்டு லட்சத்துக்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனை அனைத்து மாடுபிடி வீரர்களும் கடைப்பிடிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி சுரஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு சென்று இந்த காப்பீட்டை எடுத்துக்கொள்ளலாம் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுப்பிடி வீரர்களும் இந்த காப்பீடு திட்டத்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுபிடிவீரர்களும் எந்தவொரு காப்பீடு திட்டத்திலும் தங்களை இணைத்து கொள்ளாதவர்களாகவே மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.எனவே இந்த காப்பீடு திட்டமானது கட்டாயமாக்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காப்பீட்டை பெற்றுவிட்டால் தமிழகத்தில் நடக்கும் எந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் பங்கேற்று துரதிஷ்டமாக மரணமடைய நேர்ந்தால் அந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் செல்லும்.மேலும் இந்த திட்டத்திற்கு மாடுபிடி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.