தச்சன்குறிச்சியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிகமாக ஒத்திவைப்பு ..!பொதுமக்கள் ஏமாற்றம் …!
தச்சன்குறிச்சியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 2017 ஜனவரி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் நாளை (ஜனவரி 2-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டது. தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.