ஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டம்: போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பு  

Default Image
  • 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: 
  • இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்
  • வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பு  

இன்றைய  வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்  என்று  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டம்: 
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்:

Image result for ஜாக்டோ ஜியோ

எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று (ஜனவரி  22-ஆம்  தேதி) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு  செய்தது.

வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்பு:   

இந்நிலையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில்,பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்  என்று  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்