கோயில் நிலங்களை மீட்க மறுக்கும் அதிகாரிகளுக்கு சிறை.! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!
நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும். – உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா 5 ஏக்கர் நிலம், பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது எனவும், அதனை மீட்கும் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதில், உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமா 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும், அதனை மீட்க கீழ் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இன்னும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். அந்த நிலங்கள் அனைத்தும் தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமானது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்ற ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.