ஜாக்டோ ஜியோ – நாளைக்குள் பணிமாறுதல் கலந்தாய்வு!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க உத்தரவு.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போராட்டகாலம், பனிக்காலமாக முறைப்படுத்தப்பட்டுள்ளதால் முன்னுரிமை வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2019 ல் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று மாறுதல் பெற்று சென்றுள்ள ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை தர வேண்டும் என்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025