ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் வாங்காமல் மரம் நட வேண்டும்-அன்புமணி கோரிக்கை
ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் வாங்காமல் தமிழகம் முழுவதும் மரம் நட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நாட்டில் ஏற்பட்டிருக்கும் புவி வெப்பமயமாதலைத் தடுக்க காலநிலை அவசர நிலை பிரகடனத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் .மேலும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தட்பவெட்ப சூழ்நிலைகள் குறித்து மாணவிகள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .
ஈஷா மையத்தின் சார்பில் தற்போது ஜக்கிவாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் வாங்கிக்கொண்டு காவிரிப்படுகையில் மரம் நடும் வேலையைச் செய்து வருகிறார். இந்த பணியை அவர் பணம் வாங்காமல் செய்ய வேண்டும்.
புவி வெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலால் வெளிப்படும் கரியமிலவாயு தான் எ.னவே அரசு சார்பில் இயக்கப்படும் பொது போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்தினால் இதுபோன்ற மாசுகட்டுப்பாட்டு தவிர்க்க முடியும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.