உடனே குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சரை நீக்குங்கள்!

Default Image
குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சரை நீக்குங்கள் என  ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார். இன்று அதுகுறித்து  ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“சென்னையில் குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு நடத்திய சோதனைகளில் ரூ.250 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக குட்கா வர்த்தகம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவரங்கள் வெளியாகின.
தற்போது, போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் டி.ஜி.பி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையர்களாக பணியாற்றியவர்களும் லஞ்சம் பெற்றதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருர் பதவி விலக வேண்டும் அல்லது தமிழக முதலமைச்சர்,அமைச்சரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.”
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைத்திருங்கள் …..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்