ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாளை ஆஜர் இல்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும் , மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 22 ஆம் தேதியும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஆனால் சம்மனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் 2 முறை அவரது தேதி மாற்றப்பட்டது.
இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நாளை (பிப்ரவரி 19-ஆம் தேதி) காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஆனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாளை ஆஜர் இல்லை. முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் வேறு ஒரு நாளில் ஆஜராக தேதி மாற்றி கொடுக்க ஆணையத்தில் துணை முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…