ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று ஆஜர் இல்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும் , மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 22 ஆம் தேதியும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஆனால் சம்மனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் 2 முறை அவரது தேதி மாற்றப்பட்டது.
இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, இன்று (பிப்ரவரி 19-ஆம் தேதி) காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஆனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று ஆஜர் இல்லை.முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் வேறு ஒரு நாளில் ஆஜராக தேதி மாற்றி கொடுக்க ஆணையத்தில் துணை முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…