ஜெ. இல்லத்தை கையகப்படுத்தும் வழக்கு.. வேறு அமர்வுக்கு மாற்றி பட்டியலிட பரிந்துரை!

ஜெ. இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை கைவிட கோரி தீபக் தொடர்ந்த வழக்கு, தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட பரிந்துரை.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா மற்றும் தீபக் உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்ற கூடாது எனவும், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் முதல்வரின் அலுவலகமாக மாற்ற உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெ. இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை கைவிடக்கோரி தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்த இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் அந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வுக்கு மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025
மஞ்சள் நிற ரேஷன் கார்டு., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
March 19, 2025