ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு விசாரணை தேதி வெளியீடு!
ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு இறுதி விசாரணை நவம்பர் 10,11 ஆகிய தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் படமாக வெளிவர உள்ளது. தலைவி, குயின் ஆகிய படங்கள் தமிழில் வெளிவர உள்ளது. இந்நிலையில், இந்த படங்களை வெளியிடக் கூடாது, ஏனென்றால் அதில் தனது தந்தையை தவறாக சித்தரித்துள்ளனர் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா அவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதற்கான விசாரணைகள் பல கட்டமாக நடைபெற்று வந்த நிலையில், தீபா படத்தின் கருத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் பொய்யான குற்றச்சாட்டு கூறுவதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான இறுதி விசாரணை வருகிற நவம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.