அதிமுகவில் இணைய விருப்பம்! ஜெ.தீபா அதிரடி முடிவு!
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவியாக இருந்தவர் ஜெ.தீபா. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஆவார். அண்மையில் இவர் அந்த கட்சியை கலைத்து அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெ.தீபா, அதிமுக கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுவில் சேர விருப்ப கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.