மேலும், சபாநாயகரிடம் சென்று, அவர், தயாரித்த குறிப்புகளைக் காட்டி, மேலும், 5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டார்.ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்காமல், பேசக்கூடாது என்று கூறவே, அவைத் தலைவரே நான் பேசக்கூடாது என்று சொன்னால், நான் யாரை நம்பி இந்த அவைக்கு வருவது. என்று ஆவேசமாக ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழிததார். ஆளுநர் உரையை கிழித்ததால்தான் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆளுநர் உரையை கிழித்தது சரியா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது சரியா தவறா என்று எனக்கு தெரியாது.
ஆனால் என்னுடைய உணர்ச்சியைத்தான் இப்படித்தான் காட்ட முடியும். நான் மட்டுமா சட்டமன்றத்தில் இதுபோன்று செயல்பட்டேன். உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா தான் முதலில் பட்ஜெட்டையே கிழித்துப் போட்டார்.அவர், எங்கள் கலைஞருக்கு முன்பு பட்ஜெட்டை நகலை கிழித்து போடவில்லையா? அது மட்டும் உங்களுக்கு நியாயமா? ஆளுநர் உரை குறித்து பேச அனுமதிக்கவில்லை. அப்படியென்றால் ஆளுநர் உரை எனக்கு எதற்கு? அதனால் நான் கிழித்துப்போட்டேன். இதற்கு முன் உதாரணம் உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா தான். அதைப்பார்த்துதான் நான் அந்த செயலை செய்தேன். உங்கள் ஜெயலலிதா கிழித்ததால்தான் நானும் கிழித்தேன்.உங்கள் தலைவி ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரியே. அவர் செய்தது தவறு என்றால், நான் செய்ததும் தவறே என்று சற்று காட்டமாக பதிலளித்தார். இந்த விவகாரம் ஆண்ட மற்றும் ஆளும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுட்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…