பிறந்தநாள் அன்றே காலமானார் ஜெ.அன்பழகன்.!

தனது 62-வது பிறந்த நாளான இன்று ஜெ.அன்பழகன் காலமானார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக பிரச்சனைக்கு சிகிக்சை பெற்று வந்தார்.
அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.
ஜெ.அன்பழகன் 1958-ம் ஆண்டு பிறந்தார். தனது 62-வது பிறந்த நாளான இன்று இவர் காலமானார். ஜெ.அன்பழகன் அவர் குணமடைந்து வீடு திரும்பியதும் அவரது பிறந்தநாளை கொண்டாடவேண்டும் என உறவினர்களும், கட்சியினர் நினைத்து இருந்தநிலையில் அவரது மறைவு உறவினர்கள், கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025