ஜெயலலிதா படம் பிப்ரவரி 12ந் தேதி சட்டப்பேரவையில் திறக்கப்படுகிறது!
நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படம் திறந்துவைக்கப்படுகிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 12-ஆம் தேதி காலை சட்டப்பேரவை மண்டபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெறும் நிகழ்ச்சியில், ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.