ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் போட்டி – ஐயூஎம்எல் அறிவிப்பு
Navas kani : ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் வரும் மக்களவை தேர்தலில் போட்டி என ஐயூஎம்எல் கட்சி அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஒரு சில கட்சிகளுடன் உடன்பாடு எட்டியுள்ளது. திமுகவில் மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மமக, கொங்கு நாடு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட சுமார் 8 கட்சிகள் கூட்டணியில் இருந்து வருவது.
Read More – மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் மும்மரம்.. பாஜகவிடம் தமாகா கேட்பது என்ன?
இந்த கட்சிகளுடன் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக, இதை இதுவரை திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
Read More – இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை..!
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டதை, தொடர்ந்து மக்களவை தேர்தலில் அந்த தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. திருச்சியில் இன்று இ.யூ.மு.லீ. கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
Read More – மங்களூரு குண்டுவெடிப்புக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை.! சித்தராமையா பேட்டி.!
இந்த சூழலில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் காதர் மொய்தீன் கூறியதாவது, இந்த பொதுக்கூட்டத்தில் மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மீண்டும் ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கிய திமுகவுக்கு நன்றி தீர்மானமும், மத்திய பாஜக அரசை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் மக்களவை தேர்தலில் பாடுபட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே, மீண்டும் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளராக ஏணி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் நவாஸ் கனி, கடந்த முறை நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் களமிறங்குகிறார்.