“கத்தி கத்தி பேசினால் போதாது உண்மையைப் பேசுங்கள்”…இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!

மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

edappadi palanisamy Regupathy

சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது “மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான்.

கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். அதன்பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசை கொண்டு வந்து முடி சூட்டிக்கொள்ள துடிக்கிறார்கள். 2026-ல் அவர்களுடைய கனவு நிறைவேறாது” என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக அமைச்சர் எஸ்.ரகுபதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது ” கத்தி கத்தி பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள்! மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல ‘வாழைப்பழ காமெடியை’ போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி.

திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூகமேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள்மாண்புமிகு முதலமைச்சருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள் குரலை உயர்த்தி கைகளைச்சுழற்றி பேசினால்மக்களை ஏய்த்து,திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் பழனிசாமி

ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது! ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் ‘வலிக்காமல் வலியுறுத்திவிட்டு’ மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள்” என நகைச்சுவையாக அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested