இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது – ஓபிஎஸ்

Published by
லீனா

ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என ஓபிஎஸ் அறிக்கை. 

ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்யும் விதமாக, பல்வேறு ஆவின் பொருட்களின் விலையையும், ஆரஞ்சு நிற பாலின் விலையையும் உயர்த்திக் கொண்டே வந்த தி.மு.க. அரசு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விதமாக தற்போது ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தனிக் கவனம் செலுத்தி, கொழுப்புச் சத்தினை குறைப்பது, விலையினை உயர்த்துவது, நிதிநிலைமைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது ஆகியவற்றை ரத்து செய்யவும், ஆவின் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கோலாகலமாக நடந்த பிவி சிந்து திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!

கோலாகலமாக நடந்த பிவி சிந்து திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!

ராஜஸ்தான் :  கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…

21 minutes ago

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…

51 minutes ago

பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!

பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…

52 minutes ago

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…

1 hour ago

தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…

1 hour ago

அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…

3 hours ago