இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது – ஓபிஎஸ்
ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என ஓபிஎஸ் அறிக்கை.
ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று கூறி, ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்யும் விதமாக, பல்வேறு ஆவின் பொருட்களின் விலையையும், ஆரஞ்சு நிற பாலின் விலையையும் உயர்த்திக் கொண்டே வந்த தி.மு.க. அரசு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விதமாக தற்போது ஆவின் ஒன்றியங்கள் தங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பால் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து இருப்பதும், ஆவின் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தனிக் கவனம் செலுத்தி, கொழுப்புச் சத்தினை குறைப்பது, விலையினை உயர்த்துவது, நிதிநிலைமைக்கேற்ப அந்தந்த ஒன்றியங்களே பால் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது ஆகியவற்றை ரத்து செய்யவும், ஆவின் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, ஆவின் பால்விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்வதற்கு ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியதோடு தற்போது ஆவின் பொருட்கள் விநியோகத்திலும் பல குளறுபடிகளை ஏற்படுத்தி மக்களை வாட்டிவதைக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்! pic.twitter.com/HAq72ibChH
— O Panneerselvam (@OfficeOfOPS) February 9, 2023