இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப்போல் உள்ளது – ஓபிஎஸ்

Published by
லீனா

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ். 

சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வரு நிலையில், சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சட்டங்களை இயற்றியதன் விளைவாக, பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவதோடு, நாட்டையும் ஆளுகின்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பாரதி விழாவில் கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், மகாகவி பாரதியாரின் தொலைநோக்கு பார்வைகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மிக முக்கியமானது என்றும், பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்ற மகாகவியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மகளிரை கௌரவிக்கும் நடவடிக்கைகளை, பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், முப்படைகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருப்பதாகவும், முத்ரா யோஜனா திட்டம் உள்ளிட்ட பலத் திட்டங்களின் மூலம் 15 கோடி மகளிர் தொழில் முனைவோர்களுக்கு நிதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொட்டில் குழந்தைத் திட்டம், பெண்’ பாதுகாப்புத் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் கமாண்டோ படை என பல திட்டங்களை பெண்களுக்காக அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்கள். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு முதலாம் பருவத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம்பெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அதாவது, குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை நிலவுவதற்கும், சமூகப் பிரச்சனைகளுக்கும் பெண் விடுதலைதான் காரணம் என்பது போன்ற வாக்கியங்கள் அந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்ததாகவும், அதற்கு விடைகளாக “எழுத்தாளர் ஓர் ஆண் பேரினவாத நபர்” மற்றும் “எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார்” என இரண்டு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு மாணவ, மாணவியர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கேள்வி பெண் விடுதலையை அவமதிப்பதோடு, பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்களை, பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களை இழிவுபடுத்துவம் வகையிலும் அமைந்துள்ளது. பாரதி கண்ட கனவை நசுக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பெண்ணுக்கு எதிரான இத்தகையக் கருத்துக்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, மத்திய, மாநில அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இது மட்டுமல்லாமல், படிக்கின்ற மாணவ, மாணவிகளிடையேயும் ஒருவிதமான குழப்பத்தையும், பேதத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

தற்போது அந்த வினா நீக்கப்பட்டு, அந்த வினாவிற்கான முழு மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்து இருக்கிறது. இது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல் உள்ளது.

தேர்வுக்கான வினாத் தாள்களை தயார் செய்வதற்கு முன்பு, சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள், சர்ச்சைக்குரிய கருத்துகள், கலவரத்தை தூண்டும் வகையிலான கருத்துகள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையை வினாத்தாள் தயாரிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையும், அதற்கேற்ப வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு உண்டு.

எனவே, இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி, தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

புதிய உச்சத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…

6 minutes ago

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

12 minutes ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

24 minutes ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

1 hour ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

1 hour ago

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…

2 hours ago