ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது என கனிமொழி விமர்சனம்.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் ஆளுநரின் செயல்பாடு குறித்து, கனிமொழி எம்.பி அவர்கள், ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசியலமைப்புக்கும் ஒரு மாநிலத்தின் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற குரலையும், நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு என்ற கலைஞரின் உரையையும் மேற்கோள்காட்டி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…