இரண்டு நாள் தான்..அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்..! கெடு விதித்து திமுக நோட்டீஸ்..!

Default Image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது.

திமுக சொத்து பட்டியல்:

சென்னையில் உள்ள கமலாலயத்தில் கடந்த 14ம் தேதி காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டதைத் தொடர்ந்து திமுகவினர் சொத்து பட்டியல் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பகிரங்க மன்னிப்பு :

இந்த நோட்டீஸை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்பி அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர், தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமுகவின் சொத்துக்களின் பட்டியல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவை நீக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

RSBharati

48 மணி நேரம் கெடு :

மேலும், திமுக நிர்வாகிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக ரூ.500 கோடி வழங்க வேண்டும், இந்த நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் இவற்றை செய்யத் தவறினால் அண்ணாமலை மீது சிவில் மற்றும் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்