இது தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி – கேப்டன் விஜயகாந்த்
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தமிழக அரசு கடிதம் அனுப்பியதை வரவேற்கிறேன் என விஜயகாந்த் அறிக்கை.
22% வரை ஈரப்பதமுள்ள நெல்-ஐ கொள்முதல் செய்ய அனுமதி வேண்டி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் வரை இருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.
இந்நிலையில், நடப்பு சீசனில் விவசாயிகளிடம் இருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, தமிழக அரசு கடிதம் அனுப்பியதை வரவேற்கிறேன். இது தே.மு.தி.கவுக்கு கிடைத்த வெற்றி. மழைக்காலம் தொடங்கி விட்டதால் மத்திய அரசிடம் விரைந்து அனுமதி கொள்முதல் செய்ய பெற்று விவசாயிகளிடம் இருந்து இருந்து நெல்மணிகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதிகேட்டு, தமிழகஅரசு கடிதம் அனுப்பியதை வரவேற்கிறேன்.
இது தேமுதிகவுக்கு கிடைத்த வெற்றி.மழைக்காலம் தொடங்கி விட்டதால் மத்தியஅரசிடம் அனுமதிபெற்று விவசாயிகளிடம் நெல்மணிகளை கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்(2-2) pic.twitter.com/y2FzslxgYs— Vijayakant (@iVijayakant) October 12, 2022