அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்.!
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது, மதுரை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்றும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால், ஒருசில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக அணையை ஒட்டியுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.