“தங்கள் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது அரணாக அமையும்” – எம்.பி கனிமொழி நன்றி..!

Published by
Edison

தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அரணாக அமையும் என்று முதல்வருக்கு எம்.பி கனிமொழி நன்றி கூறியுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம் ” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

அதன்படி,பல்வேறு  புலம்பெயர் தமிழர் நல நிதியாக, மாநில அரசின் 5 கோடி ரூபாயை முன்பணமாக கொண்டு இந்த வாரியம் உருவாக்கப்படும் என்றும், புலம்பெயர் தமிழர் நல வாரியத்திற்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.மேலும்,ஜனவரி 12 ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு பயன்தரும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை இன்று முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில்,வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு திமுக எம்பி கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இடர்கள் நீங்க இந்த வாரியம் அரணாக அமையும்”,என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

11 minutes ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

31 minutes ago

“புதிய அரசியல் அதிகார பாதையை உருவாக்குவோம்” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.  இந்நிலையில், 2ஆம்…

1 hour ago

ரோஹித் சர்மா சாதனையை நெருங்கிய ஹர்திக் பாண்டியா! அடுத்த போட்டியில் முறியடிப்பாரா?

புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…

15 hours ago

பட்ஜெட் 2025 தாக்கல் : ‘மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்’ த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

16 hours ago

தமிழ்நாடு மீது இருக்கின்ற வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த பட்ஜெட் – துணை முதல்வர் உதயநிதி காட்டம்

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…

17 hours ago