“தங்கள் குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது அரணாக அமையும்” – எம்.பி கனிமொழி நன்றி..!
தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அரணாக அமையும் என்று முதல்வருக்கு எம்.பி கனிமொழி நன்றி கூறியுள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம் ” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
அதன்படி,பல்வேறு புலம்பெயர் தமிழர் நல நிதியாக, மாநில அரசின் 5 கோடி ரூபாயை முன்பணமாக கொண்டு இந்த வாரியம் உருவாக்கப்படும் என்றும், புலம்பெயர் தமிழர் நல வாரியத்திற்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.மேலும்,ஜனவரி 12 ஆம் தேதி புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு பயன்தரும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை இன்று முதல்வர் அறிவித்தார்.
#Breaking:வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவிப்பு விடுத்துள்ளார். pic.twitter.com/t3s6uWjEh9
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 6, 2021
இந்நிலையில்,வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு திமுக எம்பி கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இடர்கள் நீங்க இந்த வாரியம் அரணாக அமையும்”,என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றி. தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இடர்கள் நீங்க இந்த வாரியம் அரணாக அமையும்.@arivalayam @DMKNRIWing
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 6, 2021