எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறு-அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் செய்தியாளரை பார்த்து நீ எந்த ஊரு.?என்ன ஜாதின்னு சொல்லு என்று கேள்வி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறு .எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதிதான். வேறு அர்த்தத்தில் கேட்டிருந்தால் அது தவறுதான் என்றும் தெரிவித்துள்ளார்.