அதி.மு.க. அரசு தான் மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தது -அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அதி.மு.க. அரசு தான் மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பெட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாம் தமிழகத்தில் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது போன்று அமித்ஷா இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி மொழியை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கையில் எந்த மாற்றம் கிடையாது.
அதி.மு.க. அரசு தான் மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தது. மேலும் தமிழ் மொழியை பாதுகாக்கும் அரசாகவும் உள்ளது.நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு சிறப்பான வெற்றியை பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025