தமிழர்களை அதிகாரம் பொருந்திய இடங்களில் அமர வைத்தது திமுக ஆட்சி தான்- முதல்வர்..!

Default Image

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழர்களின் ஆட்சியாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் என்று சொல்வது உங்களையும் சேர்த்து தான். தமிழர்களை அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் அமர வைத்தது திமுக ஆட்சி தான்.

மிகவும் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் இந்த விழாவை நடத்தி கொண்டு இருக்கிறோம். 3,500 ஆண்டுகள் பழமையான இனம் தமிழ் இனம் . அனைத்து நூல்கலும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு மாபெரும் புத்தகப் பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும். அனைத்து பதிப்பாளர்களும் பயனடையும் வகையில் அந்த பூங்கா அமையும். அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.

தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.  தமிழக அரசு பணிகளுக்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்