அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது சரியானதே – ஜி.கே.வாசன்
திரு.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது சரியானதே என ஜி.கே.வாசன் கருத்து.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து அரசியல் தலைவர்களுள் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக ஆளுநரின் நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. நான் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் முடிவு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ‘மேதகு தமிழக ஆளுநர் அவர்கள், திரு.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது சரியானதே. நீதி,நியாயம் நிலைநாட்டப்பட, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழக ஆளுநர் அவர்களின் முடிவு உள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
மேதகு #தமிழக_ஆளுநர் அவர்கள்,
திரு. #செந்தில்_பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது சரியானதே.நீதி,நியாயம் நிலைநாட்டப்பட, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழக ஆளுநர் அவர்களின் முடிவு உள்ளது#gkvasan #tmc #TNPolitics @rajbhavan_tn#SenthilBalaji #TNGovernor #RNRavi pic.twitter.com/VIOc2B4yRY
— G.K.Vasan (@GK__Vasan) June 30, 2023