இதன் தொடர்பாக தான் நானும், முதல்வரும் ஆளுநரை சந்தித்தோம் – அமைச்சர் ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சற்றுமுன் சந்தித்து பேசியுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நல்ல முடிவை எடுத்து 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கிண்டி ராஜ்பனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.