மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மன்றத்தை நிறுவிய ஆன்மீக குரு பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடல் அவர் வீட்டில் இருந்து நேற்று மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் வந்து தனது அஞ்சலியை பங்காரு அடிகளாருக்கு செலுத்தினார். மற்ற முக்கிய அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆண்களுக்கு சபரிமலை… பெண்களுக்கு மேல்மருவத்தூர்… பங்காரு அடிகளாரின் ஆன்மீக நகர்வுகள்.!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தற்போது பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
எல்.முருகன் பேசுகையில், அம்மா (பங்காரு அடிகளார்) ஆன்மீகத்திற்கு மட்டுமல்லாது ஏழை மக்கள் கல்விக்காகவும் பெரும் பங்காற்றியுள்ளார். இங்குள்ள ஏழை எளியோர் வாழ்வு செழிக்க செய்துள்ளார். ஆன்மீகத்தில் மிக பெரிய புரட்சி செய்தார். பட்டிதொட்டி எங்கும் ஆன்மீக மன்றங்களை நிறுவி ஆன்மீகத்தை அனைவரிடத்திலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் ஆன்மீக புரட்சியை கொண்டு வந்தவர். பங்காரு அடிகளரின் ஆன்மீக புரட்சியை பாராட்டும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார் என்று தெரிவித்தார்.
அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், இன்று தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே மீளா துயரத்தில் இருக்கிறது. பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்த , நெருக்கமான ஆன்மீக குருவாக பங்காரு அடிகளார் இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது பிரதமர் நேரடியாக பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தமிழகத்தில் பலவேறு இடங்களில் ஓம்சக்தி வழிபாட்டு மையங்கள் அமைத்தவர்.
பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த சமயத்தில் அதனை தகர்த்து, பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம். மாதவிடாய் காலத்திலும் பூஜை செய்யலாம் என பெண்களுக்கு சம உரிமை, சமூக நீதி வழங்கியவர் பங்காரு அடிகளார். அவரது மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். ஏற்கனவே ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் இரங்கலை தெரிவித்து விட்டனர் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…