அதிமுகவை ஒன்று சேர்த்தது அண்ணாமலை தான்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் பேச்சு.!
பிளவுபட்டு இருந்த அதிமுகவை ஒன்றிணைத்ததே அண்ணாமலை தான். – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்து.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்கிய இவிகேஎஸ்.இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு இந்த தேர்தலில் தோல்வியுற்றார்.
அதிமுக தோல்வி கரணம் : இது குறித்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், அதிமுக பிளவுபட்டு இருந்ததால் தான் இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்பது போல கருத்து தெரிவித்து இருந்தர்.
அண்ணாமலை : இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து கூறுகையில், அதிமுகவை ஒன்றிணைத்ததே அண்ணாமலை தானே என்று கூறிவிட்டு சென்றார்.
ஆரம்ப சுகாதார நிலையம் : அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரநிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் 5 இடங்களிலும், ராமநாதபுரத்தில் 13 இடங்களிலும் இன்று (நேற்று) ஒரே நாளில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
மேலும், மருத்துவக்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் முதல்வரின் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அந்த செயலாக்கத்திற்கு கிடைத்த வெற்றி தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என குறிப்பிட்டார்.