ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நடுகாட்டுபட்டியில் தொடந்து நடைபெற்று வருகிறது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் , மீட்புப்பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் கார்பைடு உள்ள எந்திரம் துளையிட பயன்படுத்தப்படுகிறது.
பாறையைத் துளைத்து எடுத்தால் அருகில் உள்ள ஆழ்துளை கிணறு நொறுங்கிவிடும். எல் அண்ட் டி நிறுவனத்தின் ஜெர்மன் மிஷின் துளையிட பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் சிறுவன் சுர்ஜித் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மீட்புப் பணி பற்றிய மனோதத்துவ நிபுணர்கள் உதவியுடன் சுர்ஜித் நிலையை பெற்றோருக்கு தகவல் வழங்கப்படுகிறது. குழந்தையை குறித்து வெளிப்படையாக பேசுவது பெற்றோருக்கு தேவையற்ற கவலை ஏற்படுத்திவிடும் .மேலும் 38 அடிமுதல் 40 அடிவரை குழி தோண்டப்பட்டு உள்ளது. எந்த சூழ்நிலையிலும் தொழில்நுட்ப குழு முயற்சி கைவிடப்படாது என ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆழ்துளை கிணற்றில் பலூன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த போதிய இடவசதி இல்லை. 88 அடியில் குழந்தை உள்ளது. சுர்ஜித் கீழே சென்று விடாமல் இருக்க ஏர்லாக் முறை பயன் படுத்தப்பட்டு வருகிறது. 98 அடி வரைபுதிய ஆழ்துளை தோண்டப்பட்டு பின்னர் குறுக்கே குழி தோண்ட முடிவு செய்து உள்ளோம் என வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்நிலையில் இன்னும் சற்று தள்ளி குழி தோண்ட முடிவு செய்து பார்த்தபோது அங்கு அருகில் பாறைகள் இருப்பது தெரியவந்தது. மீட்பு பணிக்கு ஆகும் ஒட்டுமொத்த செலவை தமிழக அரசு ஏற்கும் என ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…