இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு தமிழக மீனவர்கள் மூழ்கியுள்ள நிலையில் இனியும் தாமதிக்க கூடாது, மீனவர்களை மீட்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழக மீனவர்களின் படகுகள் மூழ்கி, அவர்கள் மாயமாகி உள்ள சம்பவம் தற்பொழுது பல அரசியல் தலைவர்களின் கண்டனத்தை பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கை கடற்படை மூழ்கடித்து 4 தமிழக மீனவர்களின் படகு மற்றும் மீனவர்களின் நிலை என்ன ஆனது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் கற்களை வீசியும், ஆயுதங்களை கொண்டு தாக்கியும் வந்த இலங்கை கடற்படை தற்பொழுது படகுகளை சேதப்படுத்தி, அடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும், இனியும் தாமதிக்காமல் கடலில் மூழ்கிய தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…