இந்தியா முழுவதும் இது சட்டமாக வர வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

Default Image

திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழாவில் துணைவியாருடன் கலந்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்த்திருத்த திருமணம் தமிழகத்தில் சட்டமாக இருப்பது போன்று இந்தியா முழுவதும் சட்டமாக வர வேண்டும். சீர்திருத்த திருமண சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்