காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீர் திறக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்..! அமைச்சர் துரைமுருகன் பேட்டி..!
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீர் திறக்கப்படுகிறதா என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் கோரிக்கையை முன் வைப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இந்நிலையில், டெல்லி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் வரவேண்டிய தண்ணீரில் 6 டிஎம்சி குறைவாக இருக்கிறது. எனவே, இந்த மாதம் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் தமிழகத்திற்கு வேண்டியுள்ளது. நமக்காக காவேரி மேலாண்மை ஆணையம் என்று ஒன்று உள்ளது.
அவர்கள் தான் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீர் திறக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நமக்கு தண்ணீர் குறைவாகவோ அல்லது நிறைவாகவோ இருந்தால் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கூறும் அதிகாரம் காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது.
எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை சந்தித்த கோரிக்கை வைக்க உள்ளோம். முன்னதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அவர்களையும் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.