பல கோடி வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஜி ஸ்கொயர் நிறுவனங்களின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர். சென்னை, திருச்சி, கோவை, பெங்களூரு, மைசூர் மற்றும் பெல்லாரி போன்ற நகரங்களில் நேற்று ஐடியினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வருமான வரித்துறையினர்.
அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரு,மைசூர் ஆகிய நகரங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலை குற்றசாட்டு:
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக அண்ணாமலை, ஜீ ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துடன் திமுக உடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றசாட்டுகள் தவறானவை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்:
இதுதொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் கூறுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது என விளக்கமளித்துள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…