ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு.!

Default Image

பல கோடி வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஜி ஸ்கொயர் நிறுவனங்களின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர். சென்னை, திருச்சி, கோவை, பெங்களூரு, மைசூர் மற்றும் பெல்லாரி போன்ற நகரங்களில் நேற்று ஐடியினர் சோதனை நடத்தியதை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் வருமான வரித்துறையினர்.

அந்த வகையில், கர்நாடகாவில் பெங்களூரு,மைசூர் ஆகிய நகரங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை குற்றசாட்டு:

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட தமிழக பாஜக  அண்ணாமலை,  ஜீ ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்துடன் திமுக உடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி  இருந்தார். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த குற்றசாட்டுகள் தவறானவை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்:

இதுதொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் கூறுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயலால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. எங்களுடைய சொத்து மதிப்பு என அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தொகை தவறானது என விளக்கமளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்